அரலகன்விலவில் மைத்திரியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு
பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவ, அரலகன்விலவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்ட மேடை மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை குறித்து சிறிலங்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்லவில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல், அமைதியாகவும், நம்பகமாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இடம்பெறுவது முக்கியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த நந்திமித்ர எக்கநாயக்கவும், இன்று எதிரணிக்குத் தாவியுள்ளார்.