சிறிலங்கா வந்தார் குமார் குணரத்தினம்
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும் குமார் குணரத்தினம் இன்று அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான குமார் மஹத்தயா என்று அழைக்கப்படும் குமார் குணரத்தினம் இன்று அதிகாலை சிறிலங்கா வந்தடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கொழும்பு பல்கலைக்கழகமும், மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று களனிப் பல்கலைக்கழகமும் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டபடி, அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பு இன்று காலை கொழும்பில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பின் போது, வெளியிடப்படவுள்ளது.