மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பந்துல குணவர்த்தன எதிரணிக்கு தாவலாம்? – திடீரென வெளிநாடு சென்றதால் ஆளும்கட்சி அதிர்ச்சி

சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, திடீரென வெளிநாடு ஒன்றுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு திரும்பியதும் அவர் அரசியல் ரீதியிலான முடிவொன்றை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தல்: கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்க முடிவு?

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பொதுவான ஒரே நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் இருந்து இன்று அலரி மாளிகைக்கு நான்கு தொடருந்துகள்

வடக்கில் இருந்து, நான்கு தொடருந்துகளில் 1960 தமிழ்மக்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மைத்திரி களமிறங்கியது மேற்குலக சூழ்ச்சி – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்குலக சக்திகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டி

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகிந்த மீண்டும் போட்டியிடுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யக் கோரி, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெறுங்கையுடன் திரும்பும் சீன மீன்பிடிக் கப்பல்களின் மர்மம் – சிறிலங்கா அரசு சந்தேகம்

சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் வேறேதும் பணிகளில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொன்சேகாவை வீழ்த்திய அன்னம் மைத்திரியை காப்பாற்றுமா?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மைத்திரிபாலவை ஆதரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.

புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேல்முறையீடு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.