திருப்பி அழைக்கப்படும் 27 தூதுவர்களில் முன்னாள் படைத்தளபதிகளும் நால்வர்
அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட, 27 பேரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஒரு மாத காலத்துக்குள் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ள 29 பேரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் சீர்குலைந்திருந்த அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து, கொழும்பில் நேற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடந்த கடந்த 8ம் நாள் இரவு இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இடம்பெற்ற சதித்திட்டம் தொடர்பாக, பிரதம நீதியரசர் மொகான் பீரிசிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்தில் ஆயுதக் கப்பல் ஒன்று தரித்து நின்றது தொடர்பாக, அந்தக் கப்பலுக்குச் சொந்தமான தனியார் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண ஆளுனராக மூத்த சிவில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரான கே.சி.லோகேஸ்வரன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உள்நாட்டு விசாரணைக் குழுவொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.