அரசுப் பக்கம் தாவவில்லை – சந்திராணி பண்டார மறுப்பு
திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவுடன் ஆளும்கட்சிக்குத் தாவியதாக வெளியான செய்திகளை, ஐதேகவின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார, மறுத்துள்ளார்.
ஐதேகவின் புதிய பொதுச்செயலராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐதேகவின் பொதுச்செயலாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசதரப்புக்குத் தாவியதையடுத்தே, இந்த நியமனம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன.
ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (படங்களுடன் 3ம் இணைப்பு)
அரசாங்கத்துக்குள் இருந்து வெளியேறிய பின்னர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும், இன்று முதல் முறையாக நேருக்குநேர் சந்தித்துப் கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக, குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.
வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 19 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று வர்ணித்துள்ளார் பொது பல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர்.
கொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.