மேலும்

மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

vimal-weerawansaஅதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச.

மகிந்த ராஜபக்சவை விமல் வீரவன்சவே அழித்துக் கொண்டிருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது குறித்து பி.பி.சி சிங்களக்குக் கருத்து வெளியிட்ட அவர்,

பசில் ராஜபக்ச,  எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வருவதை தடுப்பதற்கு மகிந்த  ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் மகிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சியை நடத்துகிறார் என்ற எண்ணத்தை இல்லாதொழிக்க முடியவில்லை.

சில மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்து.

பசில் ராஜபக்ச போன்றவர்கள் அந்த மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கவில்லை.

சமூகத்தில் மத்தியதர வர்க்கத்தினரிடையே அரசாங்கம் தொடர்பாக இருந்த அதிருப்தி தொடர்பாக உணர்ந்து செயற்படாதது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கில் கிடைத்த ஆகக்கூடிய வரவேற்பும் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணமாகியது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு எனது செயற்பாடுகள் தான் காரணம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அது தவறாது.

எனது செயற்பாடுகளினால் மகிந்த ராஜபக்சவுக்கான வாக்குகள் அதிகரித்தனவே தவிர குறையவில்லை.

அய்யோ சிறிசேனா, என்று நான், தேர்தல் மேடைகளில் யாரையும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கூறவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து கடந்த காலங்களில் நான் உரையாற்றினேன்.

அந்த உரையின் முக்கியத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் நான் விமர்சிக்கவில்லை. தப்பி தவறியேதும் விமர்சனம் செய்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோரமுடியுமே தவிர வேறொன்றையும் செய்ய முடியாது.

மைத்திரிபால சிறிசேன, தனது அதிபர் பதவியை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து கொண்டாலும் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையானோர் முன்னாள் அதிபர் மகிந்த  ராஜபக்சவுக்கே இன்னும் ஆதரவளிக்கின்றனர்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களை இணைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு தேவையான அரசியல் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *