மேலும்

மகிந்தவுக்கு நெருக்கமான 29 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

external-affairs-ministryமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ள 29 பேரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

முறையான வெளிவிவகாரச் சேவை அனுபவம் இல்லாமல், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டவர்களையே நாடு திரும்ப புதிய அரசாங்கம் பணித்துள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன், இவர்களைத் திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த போதிலும், பாப்பரசரின் பயணம் மற்றும், வெளிவிவகார அமைச்சரின் இந்தியப் பயணத்தினால் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு திருப்பி அழைக்கப்பட்டுள்ளவர்களில் பலரும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று தெரியவருகிறது.

இராஜதந்திர விதிமுறைகளுக்கு முரணாக கடந்த 8 ஆண்டுகளாக ரஸ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றிய உதயானந்தவும், திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *