மேலும்

பிரதம நீதியரசர் மொகான் பீரிசிடம் சிஐடியினர் விசாரணை

Mohan-Peirisசிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடந்த கடந்த 8ம் நாள் இரவு இராணுவத்தின் உதவியுடன் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இடம்பெற்ற சதித்திட்டம் தொடர்பாக, பிரதம நீதியரசர் மொகான் பீரிசிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சதித்திட்டம் தொடர்பாக செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டில், அந்த நேரத்தில் அலரி மாளிகையில், பிரதம நீதியரசர் மொகான் பீரிசும் இருந்ததாகவும், அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

கடந்த 9ம் திகதி அதிகாலை 5 மணியளவில் அலரி மாளிகைக்கு ரணில் விக்கிரமசிங்க சென்ற போது,  அங்கு மொகான் பீரிஸ் நின்றிருந்தார்.

இதன் அடிப்படையில், சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் 5வது மாடியில் உள்ள அவரது அறையில் வைத்து மொகான் பீரிசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகுமாறு சட்டத்தரணிகள் சங்கமும், புதிய அரசாங்கமும் மொகான் பீரிசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவர் தனக்கு மேற்கு நாடொன்றில் தூதுவர் பதவி தரப்பட்டால் மட்டுமே பதவி விலக முடியும் என்று முரண்டு பிடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *