மேலும்

எட்கா உடன்பாடு குறித்து இந்தியாவுடன் அடுத்தமாதம் பேச்சு – மலிக் சமரவிக்கிரம

malik samarawickramaஇந்தியாவுடனான எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்த அடுத்தகட்டப் பேச்சுக்கள், அடுத்தமாதம் நடைபெறும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், எட்கா உடன்பாடு குறித்து இந்தியாவுடன் இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் உள்ள  நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதே எட்கா உடன்பாட்டின் முக்கிய நோக்கம்.

சிறிலங்காவுக்கு இந்த உடன்பாடு முக்கியத்துவம், வாய்ந்தது. வரும் ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில்,  இந்தியா பல விடயங்களுக்கு இணங்கியுள்ளது. ஆடை மற்றும் மிளகுக்கான ஒதுக்கீடுகளை அகற்றுவதற்கும் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

சீனா- சிறிலங்கா இடையில் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு,  700 மில்லியன் டொலர் வர்த்தகத்தை உருவாக்கும்.

ஆடை தயாரிப்புத் துறை மாததிரம் 400 மில்லியன் டொலர் வர்த்தகத்தைப் பெறும்.

சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து சீனாவுடன் இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *