மேலும்

மாதம்: August 2017

சிறிலங்காவில் தமிழ் அச்சு இதழ்களின் விற்பனை வீழ்ச்சி – சிங்கள, ஆங்கில இதழ்கள் அதிகரிப்பு

சிறிலங்காவில், சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தமிழ், நாளிதழ்கள், வாரஇதழ்களின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் ஜயசூரிய மீதான போர்க்குற்றச்சாட்டு – சிறிலங்கா இராணுவம் நிராகரிப்பு

பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் – வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, வடக்கிலும், கிழக்கிலும் இன்று பல்வேறு இடங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான இரு செயன்முனைப்புகள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முக்கியமான இரண்டு செயல்முனைப்புகளில் ஈடுபட்டுள்ளது.

மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம்

சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark  தற்போது தனது ஆறாவது  ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பணியின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை சீனக் கடற்படையின் மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் சென்ற வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்து நாசம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இப்போது தூதுவர் இல்லை – பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகம்

சிறிலங்கா தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்துள்ள, போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக கருத்து வெளியிட, பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதுரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற வழக்கினால் ஜெனரல் ஜெயசூரிய தப்பியோடவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு

ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்தல விமான நிலைய அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச அமைச்சரவை உபகுழு

மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை எவ்வாறு சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய எங்கே?

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.