மேலும்

நாள்: 10th August 2017

ரவி கருணாநாயக்கவின் முடிவை சம்பந்தன் வரவேற்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரவி கருணாநாயக்க எடுத்துள்ள முடிவை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை உச்சத்துக்கு கொண்டு செல்வேன் – பிரசாத் காரியவசம்

சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலர் பதவியின் மூலம் தாம் அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தவுள்ளதாக, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகும் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை அவசரமாகக் கூடுகிறது சுதந்திரக் கட்சி மத்திய குழு

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ரவி கருணாநாயக்கவுடன் மைத்திரி, ரணில் ஆலோசனை – விரைவில் பதவி விலகுவார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை – புலம்புகிறார் மகிந்த

மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.