மேலும்

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இப்போது தூதுவர் இல்லை – பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகம்

Brazil Sri Lanka War Crimesசிறிலங்கா தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்துள்ள, போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக கருத்து வெளியிட, பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதுரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, போர்க்குற்ற வழக்குகள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட முன்னரே, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய பிரேசிலை விட்டு வெளியேறி விட்டார் என்று பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Brazil Sri Lanka War Crimes

பிரேசிலியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பதில் தூதுவர் பிரேமதிலக ஜெயக்கொடி, இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனத்திடம் தகவல் வெளியிடுகையில்,

“தனது இரண்டு ஆண்டு சேவைக்காலம் முடிந்து, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலில் இருந்து சிறிலங்கா திரும்பி விட்டார். அவர் இப்போது இங்கு தூதுவராக இல்லை.

அவருக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகளால் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *