மேலும்

நாள்: 27th August 2017

சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகம் ஏமாற்றம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு மத்தல – சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வு

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் , கொழும்பிலிருந்து தெற்காக 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள அம்பாந்தோட்டையில் சீனாவின் 190 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமா னநிலையம் அமைக்கப்பட்டது.  இந்த விமான நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான மொத்தச் செலவீனத்தின் 90 சதவீதக் கடனை சீனா வழங்கியது.

மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு – விக்னேஸ்வரன் யோசனை

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாணசபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியாவுக்கான  பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் நாளை தொடங்குகிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடைபெறும்.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பு- இந்திய இராணுவத் தளபதி கவலை

பிராந்திய பாதுகாப்புச் சூழலில் சீனா தனது தலையீட்டை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருவதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?

சட்டமா அதிபர் திணைக்களத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று, கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.