மேலும்

நாள்: 12th August 2017

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அடுத்த சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என்று ராவய வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவை கூட்டமைப்பு ஆதரிக்காது – சுமந்திரன்

அரசாங்கத்தினால்  முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்ச நீக்கப்படுவார்?

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்சவை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லொத்தர் சபைகளை பொறுப்பேற்க மாரப்பன மறுப்பு

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்க திலக் மாரப்பன இணங்கியுள்ளதாகவும், எனினும், அவர் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பனவற்றைப் பொறுப்பேற்க மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழு ஆதரவு

புதிய அரசியலமைப்பை வரையும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆதரவையும் வழங்கும் என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.