மேலும்

நாள்: 20th August 2017

அனுராதபுர சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரேறி வந்த நல்லைக் கந்தன் (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கொழும்பில் இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் – அவிழ்த்து விடுகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எரிக் சொல்ஹெய்மின் செவ்வி – பீரிஸ் வாய்திறக்க மறுப்பு

சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்துள்ள செவ்வி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

நாளை பதவி விலகுகிறார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நாளை தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் கடல் படுக்கை எண்ணெய் அகழ்வு – இந்தியா, சிங்கப்பூர் போட்டி

மன்னார் கடல்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மாற்று அரசியல் தலைமையை உருவாக்க பௌத்த பிக்குகளுக்கு விஜேதாச அழைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டு அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, அரசியல் மாற்றத்துக்காக பரப்புரைக்கு பௌத்த பிக்குகள் தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.