மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் – வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

missing-relatives (1)காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, வடக்கிலும், கிழக்கிலும் இன்று பல்வேறு இடங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், இன்று  போராட்டங்களில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில், மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

அதேவேளை, நல்லூரில் நடத்தப்பட்ட மற்றொரு  கவனயீர்ப்புப் போராட்டத்தை அடுத்து, பேரணியாகச் சென்று, ஐ.நா பணியகத்தில் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவிலில் இருந்து, மாவட்டச் செயலகம் வரை கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.

முல்லைத்தீவு, வவுனியா நகரங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் பேரணிகளை இன்று காலை நடத்தினர்.

missing-relatives (1)missing-relatives (2)missing-relatives (3)missing-relatives (4)

missing-relatives (5)

missing-relatives (6)

missing-relatives (7)

missing-relatives (8)அதேவேளை, கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மட்டக்களப்பில் இன்று காலை ஒன்று கூடிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இதையடுத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்று கூடிய அவர்கள், அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அவர்களின் நிலையை வெளிப்படுத்தக் கோரியும், போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *