மேலும்

நாள்: 23rd August 2017

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

விஜேதாசவை பதவியில் இருந்து நீக்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று பதவி விலகுவார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச?

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா

சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.

வடக்கின் புதிய அமைச்சர்களாக ஜி.குணசீலன், சிவநேசன் – முதலமைச்சர் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஷ்யாவில் நடக்கும் ‘இராணுவம்-2017’ என்ற அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சி, அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 84 பேர் மீது நீதிமன்றங்களில் வழக்கு – சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 84 பேர் இன்னமும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விஜேதாச ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரவில்லை

சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.