மேலும்

நாள்: 22nd August 2017

சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக மக் கினொன் – நியமிக்கிறது கனடா

சிறிலங்காவுக்கான கனடாவின் புதிய தூதுவராக, மக் கினொன் நியமிக்கப்படவுள்ளார். கனடியத் தூதுவராக பணியாற்றிய ஷெல்லி வைற்றிங் அண்மையில் தமது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியேற்பு

சிறிலங்காவின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், இன்று  பதவிகளைப்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மைத்திரி – ரணில் நேற்றிரவு அவசர சந்திப்பு – விஜேதாசவை நீக்குமாறு கோரினார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு அவசரமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். 

அனுராதபுர சிறையில் இரண்டாவது நாளாகவும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலை மீது இந்தியா, ஜப்பான் ஆர்வம்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவும், ஜப்பானும் ஆர்வம் காட்டி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘தமிழர் தளம்’ – தாயகத்தில் இருந்து வெளிவரும் புதிய ‘மாதமிருமுறை இதழ்’

தமிழர் தளம் எனும் பெயரில் தாயகத்திலிருந்து புதிய ‘மாதமிருமுறை இதழ்’ வெளிவர ஆரம்பித்துள்ளது.  இதன் முதலாவது இதழ், கடந்த 20.08.17 அன்று நல்லூர் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.