மேலும்

நாள்: 24th August 2017

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனை, ஒரு மாதம் விடுமுறையில் (பரோல்) வீடு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் தோல்வி

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு ஊவா மாகாணசபையில் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர்  கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஜெனிவாவில் சிறிலங்கா அளித்துள்ள முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றங்களை காண்பிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை கோரியுள்ளது.

சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவர் – சிறிலங்கா கடற்படைத் தளபதி

போரில் எத்தகைய சாதனைகளைச் செய்திருந்தாலும், சீருடையில் தவறு செய்த கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் என்று சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை அபிவிருத்தியில் பங்கெடுக்க ஜப்பான் ஆர்வம்

திருகோணமலையின் அபிவிருத்தியில் பங்கெடுக்க ஜப்பான் ஆர்வம் கொண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் நேற்று 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

விஜேதாச ராஜபக்ச கூட்டு எதிரணியின் பொதுவேட்பாளரா?

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் பதவியில் இ ருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச கூட்டு எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.