மேலும்

நாள்: 25th August 2017

சிறிலங்காவின் நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

சிறிலங்காவின் நீதி அமைச்சராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்கிரம பெரேரோ பொறுப்பேற்றுள்ளார்.

மைத்திரியில் கையில் உள்ள தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சே படுமோசம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அரையாண்டு காலத்தில் 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காலாண்டில் சிறிலங்கா அரசின் வருமானம் கடும் வீழ்ச்சி

சிறிலங்கா அரசாங்கத்தின் வருமானம், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது இன்று வாக்கெடுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்கவுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கீதா குமாரசிங்க மாத்திரமே, இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே உறுப்பினர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியிருப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.