மேலும்

நாள்: 29th August 2017

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 80 ஆகும்.

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது கொலம்பியா, பிரேசிலில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தற்போதைய தூதுவருமான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா வான்பரப்பில் நுழைந்து தேடுதல் நடத்திய இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம்

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் சிறிலங்கா எல்லைக்குள் நுழைந்து  தேடுதல்களை நடத்தியதாக இந்தியக் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தென் மாகாணசபையில் தோற்கடிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு தென் மாகாணசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே பாலச்சந்திரனும் கொல்லப்பட்டார் – கோத்தா

ஒசாமா பின்லேடன், அவரது மனைவி, பிள்ளைகள் நிராயுதபாணிகளாக இருக்கும் போது சுட்டுக்கொன்றது குறித்து கேள்வி எழுப்பாத ஐ.நா அதிகாரிகள், சிறிலங்காவில் போரின் இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து மாத்திரம் கேள்வி எழுப்புவது ஏன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா முயற்சி

சிறிலங்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம்

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா எந்த முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்ற, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியின் கருத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும், ஒப்புக் கொண்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவினால் கிழக்கு மக்களுக்கே பேரிழப்பு

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு சிறிலங்கா அரசாங்கத்தினால்  நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாணமே பெரும் இழப்புகளைச் சந்திக்கும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

புலிகளுடனான போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி

விடுதலைப் புலிகளுடனான மூன்று பத்தாண்டு கால போர் அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐதேக அனுமதியாது – லக்ஸ்மன் கிரியெல்ல

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஐதேக அனுமதிக்காது என்று அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.