மேலும்

நாள்: 4th August 2017

‘அம்மாச்சி’ க்கு சிங்களப் பெயர் சூட்டச் சொல்கிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு

வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரி- ரணில் இணைந்து செயற்பட வேண்டும் – சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்காக, தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் சீன அரசிற்குச் சொந்தமான சீன மேர்ச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

சீன கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது

சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ்  நல்லெண்ணப் பயணமாக நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் நாள் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.