மேலும்

நாள்: 7th August 2017

ஆவா குழுத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது

கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தலைமை தாங்கியவர் என்று கூறப்படும் ஒருவர் உள்ளிட்ட ஆறு பேரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலோபாய, பாதுகாப்பு தேவைக்கு சிறிலங்காவை பயன்படுத்தமாட்டோம்- சீன தூதுவர் உறுதி

இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவில் கேந்திர அமைவிடத்தை, சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவுடன் ரணில் இரகசிய ஆலோசனை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சீன கடற்படையின் மிதக்கும் மருத்துவமனை கொழும்பு வந்தது

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக, சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான, ஹெபிங்பாங்சோ நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 178 மீற்றர் நீளமும், 24 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில், 381 மாலுமிகள் உள்ளனர்.

நிச்சயம் எதிர்த்து வாக்களிப்பேன் – மகிந்த

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை – முதலமைச்சர் குத்துக்கரணம்

வடக்கிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தாம் கூறியது முன்னாள் போராளிகளை அல்ல என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.