மேலும்

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் சிறிலங்கா கடற்படைத் தளபதி இறுதிக்கட்ட ஆய்வு

launching SLNS Sayurala (1)இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்படும், ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அதிகாரபூர்வமாக சிறிலங்காவிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி அதனை இறுதிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினார்.

சவூதி அரேபியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அங்கிருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.

அவருடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் குழுவொன்றும் இந்தியா சென்றிருந்தது.

இவர்கள் கோவாவில், கட்டும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சோதனையோட்டங்களில் ஈடுபட்டுள்ள பி-623 என்ற தொடரிலக்கமிடப்பட்டுள்ள, எஸ்எல்என்எஸ் சயுரால என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலைப் பார்வையிட்டு, அதன் திறனைப் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமாக கையளிப்பதற்கு முன்னதாக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *