மேலும்

வடக்கின் பிரதான சுற்றுலா கேந்திரமாக மாறுகிறது மன்னார்

mannar-fortவடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபலமான மடு தேவாலயம், வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு இடங்களை மன்னார் மாவட்டம் கொண்டிருக்கிறது.

மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் பல இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாவட்டமாக, மன்னாரை மாற்றும வகையில், பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடற்கரையுடன் இணைந்த 300 ஏக்கர் பகுதி அடையாளம் காணப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *