மேலும்

மாதம்: May 2017

அனுமன் பாலம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கின்ற பாலத்தை அமைப்பது தொடர்பாக அண்மைய இந்தியப் பயணத்தின் போது எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது.

சுன்னாகம் படுகொலை – 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேக நபரான இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்துலக ஊடக சுதந்திர நாளான இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பான நீதியான விசாரணைகளை நடத்தக் கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சரத் பொன்சேகா குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை- சிறிலங்கா பிரதமர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இராணுவத் தலைமைப் பதவிக்கு நியமிக்கும் எந்த முடிவும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்புக் கப்பலான பிஎம்எஸ்எஸ் டாஸ்ட் (‘Dasht’ ) நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் படகு கவிழ்ந்து விபத்து – அதிகாரியைக் காணவில்லை

மன்னார்- அரிப்பு கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது மேல் முறையீட்டு நீதிமன்றம்

இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தகுதியிழந்தவராக சிறிலங்கா மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 11 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றுள்ளார்.