எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார்
தமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
தென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது, இந்தியாவை அதன் கொலனியான சிறிலங்காவை விட்டு விலகியிருக்குமாறு கூறுவதன் மூலம், இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை சீனா நிலைநிறுத்தி வருகிறது.
அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.