மேலும்

மாதம்: December 2016

இந்தியாவிடம் 700 கோடி ரூபாவுக்கு தொடருந்துகளை வாங்குகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து 10 தொடருந்து இயந்திரங்களையும், 6 டீசல் தொடருந்து தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.

சீனாவில் இருந்து திரும்பிய மகிந்தவுடன் இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

குமார் குணரட்ணம் விடுதலை

முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரட்ணம், இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறைச்சாலைக்கு வெளியே வரவேற்று அழைத்துச் சென்றனர்.

வலுவடைகிறது இந்திய – ஆசிய – பசுபிக் கடல்சார் கூட்டு – அமெரிக்கத் தளபதி பெருமிதம்

இந்திய ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தமது உறவினைப் பலப்படுத்தி வரும் நிலையில், இலங்கைத் தீவானது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்காளியாக வளர்ச்சியடைந்து வருவதாக காலியில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.

சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரிவுபடுத்த இந்தியா முயற்சி

சிறிலங்காவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதற்கு, இந்திய உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழைப்பு – புதிய துணை அதிபர் பென்ஸ் தொலைபேசியில் பேசினார்

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரிக்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

கவிஞர் இன்குலாப் சென்னையில் காலமானார்

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார்.

பொலன்னறுவவில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய மைத்திரி

பொலன்னறுவவில் இருந்த போது, தாம் ஊடகவியலாளராகப் பணியாற்றியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது புதிய உள்நாட்டு விமான சேவை

தனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.