மேலும்

நாள்: 4th December 2016

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்

ட்ரம்ப்  ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொது பலசேனாவுக்கு மட்டக்களப்பில் நுழைய தடை – நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரர்

மட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவைக் கிழித்தெறிந்த, கலகொடஅத்தே ஞானசார தேரர், பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், தம்மை மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் தடுப்பது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.