மேலும்

நாள்: 7th December 2016

பிணையில் விடுவிக்கப்பட்டார் கருணா – வெளிநாடு செல்லத் தடை

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்குத் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சூளுரைத்துள்ளார்.

நாரந்தனை தாக்குதல் வழக்கில் ஈபிடிபியினர் மூவருக்கு மரணதண்டனை

ஊர்காவற்றுறை- நாரந்தனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அணியினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரைப் படுகொலை செய்து, 18 வரையானோரைக் காயப்படுத்திய, ஈபிடிபியினர் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று இரட்டை மரணதண்டனை விதித்துள்ளது.

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ காலமானார்

தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் துக்ளக் இதழின் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், நடிகருமான சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி (வயது-82) இன்று அதிகாலை காலமானார்.

அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய மட்டு. விகாராதிபதிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு, மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை பாழடிக்காதீர்கள்- சுமந்திரன் பாய்ச்சல்

சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

5.7 ஏக்கரில் விரிவாக்கப்படுகிறது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வளாகம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் புதிதாக 5.7 ஏக்கர் நிலத்தில் விரிவாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் சிறிலங்கா பிரதமர்

ஐதேக ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.