மேலும்

நாள்: 19th December 2016

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர்.

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி – இரண்டு பத்தாண்டுகளில் இல்லாத மோசமான வீழ்ச்சி

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடந்த நொவம்பர் மாதம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 1998ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்தளவு தேயிலை கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இரணவிலவில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா – அந்த இடத்தைப் பிடிக்க சீனா முயற்சி

இரணவிலவில் உள்ள, வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை மூடுவதற்கு, அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் – சிறிலங்கா அரசு அனுமதி

காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

திருப்பதிக்குச் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் நாள், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.