மேலும்

நாள்: 30th December 2016

அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே ஆட்சி மாற்றத்தின் பிரதான காரணிகள் – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பிரதான பங்கை வகிக்கவில்லை என்றும், அமெரிக்காவும் புலம்பெயர் தமிழர்களுமே பிரதான பங்கை வகித்ததாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எலியைப் போல அமைதியாக இருக்கிறது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா எலியைப் போல அமைதியாக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்தீர்வுக்கு அழைத்த போது சம்பந்தன் வரவில்லை – மகிந்த குற்றச்சாட்டு

போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தம்முடன் கலந்துரையாடக் கூட விரும்பவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மகிந்தவின் அச்சுறுத்தல் ‘வெற்று வேட்டு’ – ஐதேக கிண்டல்

சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை அடுத்த ஆண்டு பதவி கவிழ்ப்பேன் என்று முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கையை வெற்று வேட்டு என்று ஐதேக குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆண்டில் மைத்திரி- ரணில் கூட்டு அரசை கவிழ்ப்பேன் – மகிந்த சூளுரை

புதிய ஆண்டில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.