மேலும்

நாள்: 16th December 2016

இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கையெழுத்திட்டது சிறிலங்கா

இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் (Open Skies Agreement) சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. நாசோவில் நடந்த அனைத்துலக சிவில் விமான பேச்சுக்களில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படை, விமானப்படைத் தளங்களை அமைக்க சிறிலங்கா அரசு உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகே நிரந்தர கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவும், மத்தல விமான நிலையம் அருகே நிரந்த விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்கவும் சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள

மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கப்பல்களை விடுவிக்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டது அரசாங்கமே – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுவிக்க சிறிலங்கா கடற்படைக்கு, அரசாங்கமே உத்தரவிட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா கடற்படைக்கு கோவாவில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது

சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.