இந்தியாவிடம் 700 கோடி ரூபாவுக்கு தொடருந்துகளை வாங்குகிறது சிறிலங்கா
இந்தியாவிடம் இருந்து 10 தொடருந்து இயந்திரங்களையும், 6 டீசல் தொடருந்து தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.
இதற்கான கொள்வனவுக் கட்டளை சிறிலங்கா அரசாங்கத்தினால் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய தொடருந்து திணைக்களத்தின் ஒரு அங்கமான, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம், ஏற்கனவே சிறிலங்காவுக்கு ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.
அத்துடன் சிறிலங்காவுக்கு ஏற்கனவே, ரயில் தொகுதிகளையும், இயந்திரங்களையும் வழங்கியுள்ள இந்தியா, தொடருந்து வழித்தட கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.