அம்பாந்தோட்டை குறித்த குற்றச்சாட்டுகள் – சிறிலங்கா அதிபரிடம் சீனத் தூதுவர் கவலை
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.