மேலும்

நாள்: 5th December 2016

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார் – அப்பல்லோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வயது-68)  காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில்  சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை; மரணமானதாக வெளியான செய்தி தவறு – அப்பல்லோ அறிக்கை

தமி்ழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் உயிர்காப்பு மருத்துவ கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்று சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா உடல்நிலை மோசம் – தமிழ்நாட்டில் பதற்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்தும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவலைக்கிடமான நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா – அப்பல்லோ அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பிடல் காஸ்ட்ரோவும் தமிழரின் உரிமை போராட்டமும்

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், உலகப் புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மரணம், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைப் போலவே, தமிழர்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இருபதாம் நூற்றாண்டின் பின் அரைக் காலப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் காஸ்ட்ரோ மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தவர்.

வெளிநாட்டுப் போர்க்கப்பல்களை குறிவைக்கிறது திருகோணமலை துறைமுகம்

வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன  தெரிவித்துள்ளார்.

தமிழையும் அரசகரும மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.