மேலும்

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழைப்பு – புதிய துணை அதிபர் பென்ஸ் தொலைபேசியில் பேசினார்

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரிக்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றுமுன்னிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு சிறிலங்கா அதிபர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ்,  சிறிலங்காவுக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதிமொழியையும் கொடுத்தார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த தொலைபேசி உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்காக, அமெரிக்காவுக்கு வருமாறு சிறிலங்கா அதிபருக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்று சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழைமை தெரிவித்திருந்த நிலையிலேயே அவருக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *