சம்பந்தனுடன் தென்னாபிரிக்க தூதுவர் சந்திப்பு – ஒரு மணிநேரம் ஆலோசனை
சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு மாற்றம், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள், நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.