மேலும்

மாதம்: November 2016

திருகோணமலையில் அமெரிக்கத் தளபதி – மரைன் படைப்பிரிவை சந்தித்தார்

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று திருகோணமலைக்குச் சென்று, துறைமுகத்தைப் பார்வையிட்டதுடன், சிறிலங்கா கடற்படையினர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் பரப்பளவு குறைந்திருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு – கிளம்புகிறது சர்ச்சை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்,  லோறன்ட் நடத்திய பேச்சுவார்த்தை, அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தளபதி அட்மிரல் ஹரிஸ் அளித்துள்ள உறுதிமொழி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

‘ஐ.எஸ்’ அமைப்பு குறித்து ‘றோ’ எச்சரிக்கவில்லை – கருணாசேன ஹெற்றியாராச்சி

இலங்கையர்கள் இஸ்லாமிய தேசம் எனப்படும் ‘ஐஎஸ்’ அமைப்பில் இணைந்து கொண்டமை தொடர்பாக, இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ எந்த எச்சரிக்கை அறிக்கையையும் வழங்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனியான சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – சிறிலங்கா அரசாங்கம்

புதிய  அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் ஐஎஸ் செயற்பாடுகள் – அட்மிரல் ஹரி ஹரிஸ் கவலை

இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ்  தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டார் கருணா – சிறப்பு பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.