மேலும்

நாள்: 13th December 2016

சிறிலங்காவில் ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்

அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

வர்தா புயல் கோரத் தாண்டவம் – சென்னையில் பேரழிவுக் காட்சி

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்

புதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67) நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார்.

நாளை மறுநாள் மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.

பிரபாகரனை அழிப்பதற்காக இந்திய அரசுடன் இணைந்திருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் – சிவ்சங்கர் மேனன்

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த  நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.