இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஜெயலலிதா உடல் சென்னை மெரீனாவில் அடக்கம்
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இலட்சணக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில், சென்னை மெரீனா கடற்கரையில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இலட்சணக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில், சென்னை மெரீனா கடற்கரையில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரங்கல் குறிப்புகளை ருவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் அவையில் இன்று நடந்த அமர்வின் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் சார்பில், சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்று, அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடமிருந்து சிறிலங்கா மேலும் இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் எனவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சென்சன் போன்று மாற்றுவது தொடர்பிலும் சீனாவின் உதவியை நாடவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
மாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது.