மேலும்

நாள்: 24th December 2016

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க பென்டகன் அனுப்பிய சிறப்புக் கண்காணிப்புக் குழு

இம்மாதத்தின் ஆரம்பத்தில், அமெரிக்க கடற்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் ஒரு வாரகால கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், அம்பாந்தோட்டையிலுள்ள மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படுகைப் பகுதிக்குள் விருந்தினர்களுக்கு தடை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் விருந்தினர்கள், புறப்படுகை பிரதேசத்துக்குள் வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் – கொழும்பில் தயார்நிலையில்

உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.

அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தை திருத்துவதாக சிறிலங்கா பிரதமர் உறுதி

அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா பிரதமர் நேற்று அழைத்திருந்த கூட்டத்தில் நான்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள் மாத்திரம் பங்கேற்றனர்.