சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.