மேலும்

நாள்: 3rd December 2016

அமெரிக்க மரைன் கொமாண்டோக்களைக் கவர்ந்த கரும்புலிப் படகு

கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர்.

சிறிலங்கா மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை கற்க முடியாத நிலை

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சிறிலங்கா மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில், தலையீடு செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு சிறிலங்கா, ஈரான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலைகளை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

சீனாவுக்கு மகிந்த விடுத்த எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வுபெற்றார்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார்.

கச்சதீவு புதிய தேவாலயத் திறப்புவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழாவில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று, மீனவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதிக்கத்துக்கு எதிராக ஆவேசக் குரல் கொடுத்த மக்கள் கவிஞர் இன்குலாப் – சில நினைவுக்குறிப்புகள்

எல்லா விதமான ஆதிக்கம், அடக்குமுறைகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப். ஈழவிடுதலைப் போராட்டத்தை வாஞ்சையோடு நேசித்தவர். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய அரசின் விருதை வேண்டாம் என்று ஒதுக்கியவர்.