மேலும்

மாதம்: December 2016

வடக்கு மாகாணசபையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் அவையில் இன்று நடந்த அமர்வின் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் சார்பில், சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா – இரா.சம்பந்தன் இரங்கல்

இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்று, அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவை நெருங்க முனையும் சிறிலங்கா

சீனாவிடமிருந்து சிறிலங்கா மேலும் இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் எனவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சென்சன் போன்று மாற்றுவது தொடர்பிலும் சீனாவின் உதவியை நாடவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புடினுடன் பேச ரஸ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா

அகிலபாரதத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தாய்த்தமிழகத்தை, உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும் ‘இரும்புப்பெண்மணி’ என அழைக்கப்பட்டவருமான தமிழ்நாடு முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்த செய்தி  அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் – புதிய முதல்வரானார் ஓ.பி.

மாரடைப்பினால், நேற்றிரவு மரணமான தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.சமாதி அருகே நல்லக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார் – அப்பல்லோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (வயது-68)  காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில்  சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை; மரணமானதாக வெளியான செய்தி தவறு – அப்பல்லோ அறிக்கை

தமி்ழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் உயிர்காப்பு மருத்துவ கருவிகளின் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்று சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா உடல்நிலை மோசம் – தமிழ்நாட்டில் பதற்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்தும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.