மேலும்

மாதம்: July 2016

சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில்

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நவீனமயப்படுத்தப்படவுள்ள சிறிலங்காவின் விவசாயத்துறை – உலக வங்கி ஒப்புதல்

சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பால் (International Development Association- (IDA) சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள 125 மில்லியன் டொலர் கடனுதவிக்கு உலகவங்கி அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த தெலங்கானா மாநிலம் அக்கறை

சிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடன், சுற்றுலா, சுகாதாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பூரில் மாற்று மின்திட்டம் – இன்னும் இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை

சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா அல்லது அனல் மின் நிலையத்தை அமைப்பதா என்பது குறித்து சிறிலங்கா இன்னமும் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

வியாங்கொட ஆயுதக் களஞ்சியம் அம்பேபுஸ்ஸவுக்கு மாற்றம்

வியாங்கொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியத்தை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் நியமனம் – திரைமறைவில் நடந்தது என்ன?

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

டாக்காவில் பணயம் வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்பு

டாக்காவில் விடுதி ஒன்றில் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி்றிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

10 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகினர்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் தாமாக முன்வந்து இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையாளரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.