சீனா- சிறிலங்கா இடையே வலுவான பாதுகாப்பு உறவுகள் நீடிப்பு
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில். எதிர்வரும் 14ஆம் நாள், சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன், நியமிக்கப்படவுள்ளார்.
சிறிலங்காவில் இப்போதும் சித்திரவதைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உகண்டாவின் நீண்டகால ஆட்சியாளரான யொவேரி முசவேனியின், ஐந்தாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில், சிங்களவர்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு சிங்களக் குடியேற்றம் ஒன்று நிறுவப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கில், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள், மற்றும் கலாசார சீரழிவுகள் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள, யாழ். ஆயர், இந்த நிலையை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும், ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றாகவே சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை, சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை தலைவர் தம்மிக ரணதுங்க நிராகரித்துள்ளார்.
நியூயோர்க்கில் எதிர்வரும், 10ஆம் ,11ஆம் நாள்களில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச்சபையின் சிறப்பு அமர்வில் சிறிலங்காவின் சார்பில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க பங்கேற்கவுள்ளார்.