மேலும்

சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி

DTNFபுதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி, ஈரோஸ், ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்துள்ளன.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, ”இந்த அரசியல் கூட்டணிக்கு ஈபிடிபி, ஈரோஸ் உள்ளிட்ட 15 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டிக் கோரிக்கைக்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி எதிரானது. ஆனாலும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல.

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி சமஸ்டி முறையைக் கோராது. ஆனால், நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமமான உரிமைகளுடனும் வாழும் உரிமையைக் கோரும்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் கட்சி தீர்வைக் காணும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணத்தைப் பெற்றுத் தரும்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதும், இந்தப் புதிய கூட்டணி அமைய மற்றொரு காரணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள் “சமஸ்டியை நிராகரிக்கிறது ஆனந்தசங்கரியின் புதிய அரசியல் கூட்டணி”

  1. puviraj says:

    எமது தேசத்தின் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நீங்கள் யாருடைய தேவையின் நிமிர்த்தம் கூக்குரல் இடுகின்றீர்கள் தாங்கள் யாவரும் பச்சோந்திகள் என்பது தங்களுக்கே தெரியும்

  2. Sivasoma says:

    எமது ஆரம்ப கால அரசியல்வாதிகள் கொடி ,குடை ,ஆலவட்டம் ,குதிரை ,பல்லக்கு தேர் இவற்றுக்கு தமது இனத்தின் எதிர்காலத்தை சிங்களவனுக்கு விற்றவர்கள் . சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், இந்தியா இரு நாடுகளாகப் பிரிவதற்கு முன்னர் நாட்டின் பிரிவினையை கோராது முழு இந்தியாவின் பிரதமராகி ஜின்னா பொறுப்பேற்று தான் விரும்புவதுபோலவே மந்திரிசபையையும் அமைக்கலாம் என்ற காந்தியின் கோரிக்கையை நிராகரித்து ,பாக்கிஸ்தான் எனும் நாடு உருவாக காரணமாக இருந்தவர் ஜின்னா .தனது நலனை முன் நிறுத்தாது இஸ்லாமியர்களின் விருப்பை நிறைவு செய்ததால் அந்த நாடு உருவாகியது ,

    இலங்கையில் எமது அக்காலத் தலைவர்கள் ஐரோப்பியர்களுடைய வாழ்கை முறையை பின்பற்றி ஐரோப்பியர்களை விட ஐரோப்பியத்தனம் நிறைந்தவர்களாக ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக அரசியல் செய்தவர்கள்.கண்டியில் நடந்த முஸ்லிம் -சிங்களவர் இனக்கலவரத்தில் சிங்களவருக்கு வக்காலத்து வாங்கி லண்டன்வரை சென்றவர்கள்,வழக்கில் சிங்களவர் வெற்றி பெற தேரில் ஊருலா வந்து பெருமைப பட்டவர்கள்.
    அவர்கள் அடியொற்றி அரசியல் செய்யும் சங்கரியும் அவர்தம் புதிய கூட்டணியும் சமஸ்டியை விடுத்து ஒற்றையாட்சியில் தம்மை வரித்துக்கொள்ள முனைவது கேலிக்கூத்தானது.உலகின் பல பாகங்களிலும் மிகவும்
    சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கும்,நீடித்த அரசியல் ஸ்திரத் தன்மையுடன் ஆட்சிக்கும் காரணமாக அமைவது சமஸ்டி கொள்கைகளே ,உதாரணம்: கனடா,சுவிட்சலாந்து,ஜெர்மனி மற்றும் பல.பிரிவினை கோரிக்கையின் ஊற்றுக்கண் அடக்குமுறையே.இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை தொடரும்போது ஒற்றையாட்சிதான் தமது கொள்கைஎனக் கூறுவது வழியறியாக் குருடன் கொடிய பாம்பினை வழித்துணைக்கு அழைக்கும் முட்டாள்தனமானதாகும.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *