பனாமா ஆவணங்கள் – குற்றச்சாட்டை மறுக்கிறார் மேஜர் நிசங்க சேனாதிபதி
வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று தாம், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கவில்லை என்று மறுத்துள்ளார் அவன்ட் கார்டே பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி.
