மேலும்

மாதம்: May 2016

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் வருகை – சிறிலங்காவுக்கு உதவுவது குறித்து ஆலோசனை

அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடலோரக் காவற்படைக்கு ஜப்பானிய அரசாங்கம் இரண்டு ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்க இணங்கியுள்ளது. 30 மீற்றர் நீளமுடைய  ரோந்துப் படகுகளே சிறிலங்காவுக்கு வழங்கப்படவுள்ளன.

ஆணைக்குழுவை ஏமாற்றும் பசிலின் மனைவியும், மகளும் – அதிகாரிகள் திணறல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தில் இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின், இரண்டு போர்க்கப்பல்கள் இன்று நல்லெண்ண மற்றும் விநியோகத் தேவைகளுக்கான பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

முன்னாள் இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி யாழ். படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி மற்றும், புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் அசோக் மாலிக் ஆகியோர், நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

பிரித்தானியா புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

லண்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஜெனிவா செல்ல முயன்ற 10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலிக் கடவுச்சீட்டுகளுடன், பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வியட் ரைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள்

முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது.

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டுகிறது சிறிலங்கா கடற்படை

பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் பதிவேடுகளை ஒப்படைக்க சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடைசியாக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படும், அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு, வந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.